கொரோனா , நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி. இந்திய மருத்துவர்கள் சங்கம் ‘

0
294

கொரோனா பாதிக்கப்பட்டு நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக 2150912 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 64068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 43446 பேர் பலியாகி உள்ளனர். 24 மணி நேரத்தில் 886 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக மருத்துவர்களும் அதிக அளவில் பலியாகி வருகிறார்கள். அதன்படி கொரோனா பாதிக்கப்பட்டு நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் 170 பேர் 50 வயதை கடந்தவர்கள். அதாவது 82 சதவிகிதத்திற்கு அதிகமானோர் 50 வயதை கடந்தவர்கள் . 40 சதவிகிதம் பேர் பொதுநல மருத்துவர்கள். தமிழகத்தில்தான் இப்படி கொரோனா காரணமாக அதிக மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்.

தமிழகம் – 43 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்
மஹாராஷ்டிரா – 23 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்
குஜராத் -23 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்
பீகார் – 19 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்
மேற்கு வங்கம் – 16 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here