மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு,

0
177

மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு,

புதிதாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கும் த வெ க கட்சியின் தலைவரும் தமிழகத்தில் முதல்வராக வரப் போகும் திரு விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி மீடியா பத்திரிகை நிருபர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் புதிதாக வரவுள்ள ஆட்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு அரசு வழங்கும் அக்ரடேஷன் மற்றும் பிரஸ் பாஸ் ஆகியவைகளை பாரபட்சம் பார்க்காமல் பத்திரிகை பிரிண்ட் செய்து வெளி கொண்டு வரும் அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதேபோல கடந்த ஆட்சியில் இரண்டு வருடங்களாக பிஆர்ஓ, டி டி,ஜேடி மற்றும் சில அதிகாரிகள் பல பத்திரிகையாளர்களுக்கு இந்த கார்டு வழங்கப்படாமல் இருக்கிறது எனவே இது போன்ற மோசமான அதிகாரிகளை அங்கிருந்து மாற்றிவிட்டு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சமமாக அனைத்து சலுகைகளையும் வழங்கக்கூடிய அதிகாரிகளை அங்கு நியமித்து பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய அடையாள அட்டைகளை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் தற்போது இருக்கும் அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட்டால்தான் நல்லது நடக்கும்,உங்கள் ஆட்சியில் இனி வரும் காலங்களில் பத்திரிகையாளர் அனைவருக்கும் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கும் பத்திரிகையாளர்கள்.

அதேபோல சுயநலமாக பல சங்கங்கள் இருக்கிறார்கள் அவர்களை கண்டு பிடித்து நீங்கள் களை எடுக்க வேண்டும், அவர்கள் அனைவரும் தன் சுயநலத்திற்கு மட்டுமே பாடுபடக் கூடியவர்கள் உண்மையாக பத்திரிக்கையாளனுக்காக போராடும் சங்கத்தைச் சேர்ந்தவர்களை கண்டுபிடித்து அவர்களின் தேவையை அறிந்து அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பல நல்ல விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது பெரும்பாலான பத்திரிகையாளர்களை அவர்களுக்கு உண்டான அடையாள அட்டைகளையும், உரிமைகளையும்,சலுகைகளையும் பறித்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கு முக்கிய காரணம் பிஆர்ஓ மற்றும் அங்கு பணி புரியும் சில அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது,

அதேபோல அக்ரடேஷன் கமிட்டி போன்ற இதர கமிட்டிகளையும் உடனடியாக கலைக்க வேண்டும் என்பது உண்மையான பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது அதையும் தாங்கள் செய்வீர்கள் என நம்புகிறோம்.

அன்புடன்
மாநில தலைவர்
தமிழ்நாடு புதுச்சேரி
மீடியா பத்திரிக்கை நிருபர்கள் சங்கம் சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here