வேலூர் மாவட்டம் குடியாத்தம்
குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் விபத்து இல்லா தீபாவளி கொண்டாடுவதை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு
காவல்துறையினர் சார்பாக
நடத்தப்பட்டது.
இதில் குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம் எனவும், பட்டாசு வெடிப்பதை திறந்தவெளியில் வெடிக்க வேண்டும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது ஆடை பாக்கெட்டுகளில் பட்டாசுகளை வைக்க வேண்டாம், பட்டாசுகளை ஒரே இடத்தில் கட்டி வெடிக்க வேண்டாம், பட்டாசு வெடிக்கும் பொழுது நைலான், சில்க் போன்ற ஆடைகள் அணிந்து கொண்டு பட்டாசு வெடித்தால் தீ மேலே படும்போது எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும் எனவும், பட்டாசு வெடிக்கும் பொழுது தீப்பெட்டி பயன்படுத்தாமல் நீளமான ஊதவத்திகளை பயன்படுத்த வேண்டும் என ,
நகர காவல் ஆய்வாளர் லட்சுமி, வாகன போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் ராமுஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.










