முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு,
பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இலக்கிய, பகுத்தறிவு நூல்களை வழங்க வேண்டும் என்று சென்னை அன்பகத்தில் நடைபெற்ற மாநில- மாவட்ட இலக்கிய அணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இலக்கிய மாநில செயலாளர் வி.பி. கலைராஜன்,இலக்கிய அணி துணை தலைவர் கவிச்சுடர் கவிதைப் பித்தன் மற்றும் நிர்வாகிகள் கடந்து கொண்ட கூட்டத்தின் முடிவின்படி,
சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் வழக்கறிஞர் மாதவரம் எஸ்.சுதர்சனம்,மாநில மீனவர் அணி துணைத்தலைவர் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் வழிகாட்டுதல் படி மாவட்ட இலக்கிய அணி தலைவர் கவிஞர் த. மகிழன் ஏற்பாட்டில்,மாவட்டப் பிரதிநிதி பி.எஸ். தலைமையில்,
மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வி.தியாகராஜன் திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு பள்ளிகளுக்கு இலக்கிய பகுத்தறிவு புத்தகங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்டப் பிரதிநிதி ஜே.பி. சந்தானகிருஷ்ணன்,கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் கு.தமிழ்மணி, இரா.கணேசன், சோட்டு ஜோ.ராஜ்குமார்,ஏ.பி.நாகராஜ்,பிஎஸ்என்எல் ராஜேந்திரன்,அன்பு,
காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்த பி.விமல்தாஸ், வாழப்பாடி செந்தில், பூங்கவி ராஜேந்திரன்,வடசென்னை திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன், பகுத்தறிவாளர் பேரவை மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி, அமைப்பாளர் பா. சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
















