மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் இளம்பெண் பயிற்சி பாசறை கூட்டம் :

0
54

oஇளம்பெண் பயிற்சி பாசறை கூட்டம் சென்னை வடகிழக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் 22-10-2025 காலை 10மணியளவில் இளம் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம், சென்னை ரெட்டேரி லட்சுமிபுரம் GPL பேலஸில் நடைப்பெற்றது.

சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர்  மாதவரம் எஸ்.சுதர்சனம் MABL MLA அவர்களின் தலைமையில்

இளம் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர் கழக துணை பொது செயலாளர் பாராளுமன்ற குழு தலைவர் மதிப்பிற்குரிய  கனிமொழி கருணாநிதி MP அவர்கள் கலந்து கொண்டு பெண்களின் முக்கியத்துவத்தையும், பெண்களின் சாதனைகள் போன்ற பல்வேறு விஷயங்களை எடுத்துக்காட்டி இளம் பெண்களை ஊக்க வைக்கும் வகையில் சிறப்புரையாற்றினர்.

மற்றும் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் MLA அவர்கள் ஏற்பாட்டில், கூட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண் பயிற்சி பாசறையில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்புடன் அறுசுவை உணவு   வழங்கப்பட்டது. : இந்த நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி MP .தி.மு.க மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் MLA, திராவிடர் கழக துணை பொது செயலாளர் மதிவதனி, கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மகளிர் அணி சமூக வலைத்தள பொறுப்பாளர் யாழினி. மற்றும் M. கோமல வள்ளி-மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் . M .அம்மு- மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆகியோரின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன் நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பில், திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் கிழக்கு பகுதி செயலாளர்  தி.மு.தனியரசு _அவர்கள் கலந்து கொண்டு,  கனிமொழி MP அவர்களை சால்வை கொடுத்து வரவேற்றார்.

இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், மண்டல குழு தலைவர்கள், பகுதி கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பகுதி வட்ட அணிகளின் நிர்வாகிகள், பாக முகவர்கள், கழக தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here