தேர்தல் பணம் பட்டுவாடா இல்லாமல் நேர்மையான முறையில் நடைபெறுவது குறித்த வழக்கின்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ‘‘வாக்காளர்கள் பேரம் பேசி ஓட்டுக்கு பணம் வாங்குகின்றனர், பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டனர். வருமான வரித்துறைக்கு தெரிந்தே, அரசியல் கட்சிக்கு இடையே கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. வாக்காளர்கள் 10 வாக்குகள், 15 வாக்குகள் என பேரம் பேசி பணம் வாங்குகின்றனர்’’ என நீதிபதிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்
















