புது வண்ணாரப்பேட்டை- வீடு மாற்றும் போது இரண்டாவது மாடியில் இருந்தது தவறி விழுந்தவர் பலி:

0
408

வீடு மாற்றும் போது இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவில் வசித்து வந்தவர் சபியுல்லா வயது 57 இவர் மண்ணடியில் உள்ள ஹோட்டலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு ஆபிதா என்ற மனைவி வயது 50, மற்றும் இரண்டு மகன்கள் காதர் பாஷா ,மகபூப் பாஷா மகள்கள் மஸ்தானி, பாத்திமா ஆகிய பிள்ளைகள் உள்ளனர்

புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவில் உள்ள வீட்டில் கீழ்தளத்தில் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். வீட்டு வாடகை அதிகமாக உள்ள காரணத்தினால் மேலே உள்ள வீடு வாடகை குறைவாக உள்ளதால் கீழ் தளத்தில் இருந்து இரண்டாவது மாடிக்கு குடித்தனம் செல்கிறார் அதற்காக மகன் காதர்பாஷாவுடன் பொருட்களை மாற்றிக் கொண்டிருந்தனர் அப்போது சோபாவை ஒருமுனையில் காதர் பாஷா கீழ்பக்கமாகவும் சபியுல்லா மேல் பக்கமாகவும் தூக்கிக் கொண்டு மாடியில் ஏறியபோது எதிர்பாராமல் சபியுல்லா இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து நிலை தவறி தடுமாறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார் உடனடியாக குடும்பத்தார் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சபியுல்லா இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுதொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here