தீபாவளியை முன்னிட்டு ரூ.2½ கோடிக்கு ஆடுகள் விற்பனை;

0
271

திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.
நாளை (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று அய்யலூர் ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது. ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தையில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் சந்தைக்குள்ளும், சந்தைக்கு வெளியேயும் கூட்டம் அலைமோதியது.
சந்தையில் விற்பனைக்கு வந்த ஆடுகளை வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர். நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 முதல் ரூ.450 வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரையிலும், செம்மறி ஆடு ரூ.5 ஆயிரத்து 500 முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரையிலும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2½ கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தீபாவளியை முன்னிட்டு சந்தைக்கு ஆடுகளின் வரத்து அதிகம் இருந்தது. இதனால் கடந்த வாரங்களை காட்டிலும் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here