தண்டையார்பேட்டையில் கோரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது
சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டோர் கோரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தில் தனிமைப்படுத்துதல் அறிவிப்பு ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர்
மேலும் கோரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக புது வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் இலவச தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது 39-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் களப்பணியாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 45 வயதிற்கு மேற்பட்ட வர்களுக்கு அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவுறுத்தப்பட்டு பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர் மேலும் மார்க்கெட் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் கோரோனாவை கட்டுப்படுத்தும் விதமாகவும் இலவச தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பட்டதை தெரிவிக்கும் விதமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்
இன்று நடைபெற்ற கோவில் நைன்டீன் இலவச தடுப்பூசி சிறப்பு முகாமினை தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் வெங்கடேசன் ஆய்வு செய்தார் மேலும் 39-வது வார்டு பகுதிக்குரிய உதவி பொறியாளர் ராமகிருஷ்ணன்
மாநகராட்சி ஆய்வாளர் நரசிம்மலு ஏ ஆர் ஓ சுரேஷ் சுகாதாரத் துறை ஆய்வாளர் மௌலி மற்றும் பிரேம் குமரன் ஆனந்த் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்
















