சென்னை பழையவண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த பிர்தோஷ் இவர்
TVS இருசக்கர வாகன கம்பெனியில் வேலை செய்து வருகிறார் நேற்று இரவு தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 4வது தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்க்காக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அப்போது
ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பிர்தோஷ் வழிமறித்த கத்தியை காட்டி மிரட்டி இரும்பு ராடு எடுத்து தலையில் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்த பிர்தோஷின் பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர் அருகில் இருந்தவர்கள் பிர்தோஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் இச்சம்பவம் குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர் அப்பொழுது தண்டையார்பேட்டை ஐ. ஒ. சி பகுதியில் ரவுடிகள் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர் விசாரணையில் தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் (எ ) GH ரமேஷ்
ஆனந்த் (எ) லொட்ட ஆனந்த்,
கார்த்திக், சரவணன், வெங்கடேசன் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்












