மருத்தவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழக சட்டப்சபையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மசோதாக்களுக்கு இயற்றப்பட்டன. ஆனால் அந்த மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த மாணவர்கள் சிலர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஒரு பக்கம், கடும் மழை வெள்ள பாதிப்பு என மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நீட் தேர்வு நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தயுள்ளார். 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என்று கூறியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரரும் இது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் நீட் தேர்வு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர், கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன்.
















