அதிமுக அவைதலைவருடன் முதல்வர் சந்திப்பு;

0
290

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைப்பயிற்சியின் போது தவறி விழுந்ததின் காரணமாக அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ,தற்போது வீடு திரும்பிய அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் அதிமுகவில் தற்போது உள்ள சூழல் ,அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின்போது தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here