காற்றாடி பிடிக்கச் சென்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது:

0
409

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் காற்றாடி பிடிக்கச் சென்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன்நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசிம் 14வயதான இவர் தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் ரயில்வே யார்டில் இடையே நின்று கொண்டிருந்த காலி பெட்ரோல் வண்டியில் ஏறி காற்றாடி எடுக்கும்போது மின்சார ரயிலில் அடிபட்டு வண்டியிலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டார் உயிருக்கு போராடிய சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் 60 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

காற்றாடி பிடிக்கச் சென்ற ரயில் மீது ஏறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here