காசிமேடு மீனவர்கள் விசைப்படகு மீது கப்பல் மோதி விசைப் படகு மூழ்கியது 7 பேர் உயிர் தப்பினர்(

0
369

காசிமேடு மீனவர்கள் விசைப்படகு மீது கப்பல் மோதி விசைப் படகு மூழ்கியது 7 பேர் உயிர் தப்பினர்

காசிமேடு மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது கப்பல் மோதி விசைப் படகு மூழ்கியது 7 பேர் உயிர் தப்பினர்

காசிமேடு பவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் இவர் படகு உரிமையாளராகவும் உள்ளார் படகில் ஓட்டுநராக உள்ளார் இவர் தலைமையில் லோகநாதன் வயது 49 அஜித்குமார் வயது 25 ரஞ்சித் வயது 25 மணி வயது 60 வயது 50 ராஜாக்கண்ணு வயது 55 அரி வயது 50 ஆகியோர் இன்று அதிகாலை 2 மணியளவில் காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்று கொண்டிருந்தனர் எண்ணூர் துறைமுகம் தாண்டி இவர்கள் சென்று கொண்டிருந்தபோது கும்மிருட்டாக இருந்ததால் இவர்கள் மீது எண்ணூர் துறைமுகத்தில் இருந்து வெளியே வந்த சரக்கு கப்பல் டமாரென மோதியது மோதிய வேகத்தில் விசைப் படகு இரண்டாக பிளந்தது இருக்கிற நேரத்தில் வயர்லெஸ் மூலம் தங்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி விட்டது எங்களை காப்பாற்றுங்கள் என அவர்கள் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்தனர் இது சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து விசை படகுகளுக்கும் கேட்டு உள்ளது படகு கடலில் மூழ்க தொடங்கியதால் அவர்கள் கடல் கீழே குதித்து கிடைத்த பொருட்களை கையில் வைத்துக் கொண்டு நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர் மோதிய கப்பல் எந்தவித உதவி செய்யாமல் சென்றுவிட்டது இந்த தகவலை கேள்விப்பட்ட எழிலரசன் குமார் என இரண்டு விசைப்படகினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அவர்கள் செல்வதற்கு 2 மணி நேரம் ஆகியிருந்தது இரண்டு மணி நேரமும் அவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர் உதவ சென்ற இசை படையினர் அவர்களை மீட்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர் இதில் ராஜாக்கண்ணு என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது உயிர் தப்பிய மீனவர்களை ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜேஜே எபனேசர் ப ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார் இதுகுறித்து மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் கப்பல் மோதி யாருக்கும் எந்தக் காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர் கடலில் மூழ்கிய விசைப்படகில் மதிப்பு 40 லட்சம் இருக்கும் என தெரிகிறது மீன்வளத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தகவல்கள் சேகரித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here