ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல சரித்திர பதிவேடு ரௌடி சீசிங் ராஜா இன்று காலை என்கவுண்டர் செய்தது தொடர்பாக அடையாறில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்
சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேசிய போது:
காவல்துறையின் சிறப்பு பிரிவினர் ஆந்திரா அருகில் வேறு ஒரு வழக்குக்காக சென்ற நிலையில் அங்கு சரித்திர பதிவேடு ரௌடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து அங்கு இருந்த தனிப்படையினர் கடப்பாவில் ரவுடி சீசிங் ராஜாவை கைது கைது செய்து பின்னர் வேளச்சேரி ஜெ7 காவல் நிலைய ஆய்வாளர் விமல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை விசாரிக்கும் பொழுது அவர் ஆயுதங்களை சென்னை நீலாங்கரையில் பதுக்கி வைத்திருப்பதாக கூறியிருந்தார்
அதன் அடிப்படையில் சீசிங் ராஜா பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அக்கரை பக்கிகாம் கெனால் பேங்க் பகுதிக்கு வேளச்சேரி ஜெ7 காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் விமல் மற்றும் அடையாறு ஜே2 காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் இளங்கனி ஆகியோர் அழைத்து சென்று விசாரிக்கும் பொழுது ரவுடி சீசிங் ராஜா அங்கே மண்ணுக்குள் பதுக்கி வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து அஜார் செய்வதுபோல் பாவனை காட்டி காவலர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் அந்த குண்டுகள் காவல்துறையினரின் வாகனத்தின் மீது பாய்ந்தது எனவே தற்காப்புக்காக வேளச்சேரி ஜெ7 ஆய்வாளர் விமல் அவரை மார்பு மற்றும் மேல் வயிறு பகுதிகளில் சுடவேண்டிய நிலை ஏற்பட்டது
ரவுடி சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு, நான்கு ஆயுத வழக்குகள், மூன்று ஆள் கடத்தல் வழக்குகள், இரண்டு வழிப்பறி வழக்குகள் உட்பட 39 வழக்குகள் உள்ளன இவர் மீது எட்டு முறை குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது
மூன்று மாதத்திற்கு முன்பு 10 வழக்குகள்
பெண்டிங்கில் இருந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இவரை (ப்ரோக்லைன்ட் அஃபெண்டர்) தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது
எங்களது விசாரணை பொறுத்தவரை ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்கும் சீசிங் ராஜாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை நாங்கள் வேளச்சேரி வழக்கு தொடர்பாக மட்டுமே சீசிங் ராஜாவே கைது செய்துள்ளோம்
வேளச்சேரியில் துப்பாக்கி முனையில் பணம் பறித்ததற்கான வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக சீசிங் ராஜா கைது செய்யப்பட்டார்
குற்றவாளியை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதே எங்களது நோக்கம் ஆனால் வேறு வழி இல்லாமல் தற்காப்பிற்காக சுட வேண்டிய நிலை வருகிறது என கூறினார்.
















