ஏழை மக்கள் வாழ்வின் மேம்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு;

0
247

குடிசைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என்பதற்காக குடிசை மாற்று வாரியத்தை கருணாநிதி தொடங்கினார். அதன்பிறகு குடிசைமாற்று வாரியம் சார்பில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

எல்லோராலும் பாபுஜி என்று அழைக்கப்பட்ட ஜெகஜீவன்ராம் குடிசை மாற்று வாரிய திட்டங்களை பாராட்டி உள்ளார். இந்தியாவுக்கே முன் மாதிரியான திட்டம் என்று அவர் அப்போது தெரிவித்துள்ளார்.

இப்படி ஏழை மக்கள் வாழ்வின் மேம்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றப்படுகிறது. இனி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பை தி.மு.க. உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here