எண்ணூர் பகுதியில் ரூ, 7 லட்சம் குட்கா பறிமுதல் 3 பேர் கைது;

0
327

சென்னை, எண்ணூர் பகுதியில், வாகன சோதனையில், சுமார் ரூ, 7 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

சென்னை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில், இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் கணேஷன், நந்தகுமார், ஆயுதப்படை காவலர்கள் மாரிமுத்து , அப்துல் பாசித் ஆகியோர் , வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்,அப்போது, ஒரு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர், அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன. போலீசார், ஆட்டோவில் இருந்த,
சென்னை, கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர் , விவே கானந்தர் தெருவை சேர்ந்தவர் கிராப் சந்திரா, இவரின் மகன் லிபின் குமார்(35), என்பவரை கைது செய்தனர், விசார்ணையில், இவர் , கேளம்பாக்கம், மாம்பாக்கம் , கொத்தவால் சாவடி பகுதிகளில்,118 குடோன் வைத்து, அதில், குட்கா, ஜர்தா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர், லிபின் குமார் தகவலின் பேரில், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் மெயின் ரோடு, மாம்பாக்கத்தை சேர்ந்த ஜின்னா மகன் குளோனி ஜின்னா(39), திருவேற்காடு, ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன், இவரின் மகன் பார்த்தசாரதி(36) ஆகியோரையும் கைது செய்து, சுமார் 7 லட்சம் மதிப்பிலான, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here