திருப்பூர் – உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவ அறக்கட்டளையின் சார்பில் உடுமலை வரலாறு நூல் வெளியீட்டு விழா உடுமலையில் உள்ள ஜி வி ஜி கலையரங்கத்தில் இன்று காலை 10 மணி அளவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெய ராமகிருஷ்ணன் அவர்களும் கலந்துகொண்டு உடுமலை வரலாற்று நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள் உடுமலையை சேர்ந்த பெரியோர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்














