அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் செயல்பாடுகளை பாராட்டி புகழாரம்- மு.க.ஸ்டாலின்

0
302

அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் செயல்பாடுகளை பாராட்டி புகழாரம் சூட்டினார். மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவர் எப்படியெல்லாம் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்று அழைக்க வேண்டும் என்று நான் கருதிக்கொண்டு இருக்கிறேன். அந்த பெயருக்கு முழு தகுதி படைத்தவராக அவர் விளங்கிக்கொண்டு இருக்கிறார். அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்றாக அமைந்திருக்கிறது.

சட்டமன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வாரம் தான் ஆகிறது. இன்னும் சட்டமன்ற கூட்டத்தொடர் முடியவும் இல்லை. 13-ந்தேதி தான் முடியப் போகிறது. அறிவித்து ஒரு வாரத்துக்குள் சட்டமன்றம் முடியும் முன்பே திட்டம் செயல்படுகிறது என்றால் அது சேகர்பாபு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த திட்டம் தான்.

நாம் அடிக்கடி சொல்வோம் எள் என்றால் எண்ணையாக நிற்பார் என்று. ஆனால் சேகர்பாபுவை பொறுத்தவரை எள் என்று சொல்ல வேண்டியதில்லை. எள் என்று சொல்லும் முன்பே எண்ணையாக நிற்க கூடியவர்.

இங்கு அமைச்சர்கள் வேலு, மா.சுப்பிரமணியன் இருக்கிறார்கள். அவர்கள் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்கள். நான் உரிமையோடு சொல்கிறேன். இந்து அறநிலையத்துறை என்பது கொடுத்துவைத்த துறையாக சேகர்பாபுவால் மாற்றப்பட்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here