அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.
சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்களும்,
சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்களும் நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை மாநகரில் குற்ற செயல்கள் குறையவும், குற்றவாளிகளை கண்டு பிடிக்கவும், காவல்துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கக்கூடிய மூன்றாம் கண் என்று அழைக்கக்கூடிய சிசிடிவி கேமராக்கள் காவல்துறை சார்பிலும் , சென்னை மாநகராட்சி சார்பிலும், தெருக்களில் உள்ள பொது மக்கள் சார்பிலும் , பொது நல அமைப்புகள் சார்பிலும் போடப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பாரமரிப்பு இல்லாததால் சரியாக வேலை செய்யவில்லை.
இதனால் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடிய குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த சிரமம் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காசிமேடு N.2 காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட , புதிய அமராஞ்சிபுரத்தில் உள்ள அருள் மிகு ஓம் சக்தி விநாயகர் ஆலயத்தில் காணிக்கை உண்டியலை உடைத்து திருடிய குற்றவாளியை பல மாதங்கள் ஆகியும் இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை, ஏன் என்றால் ஜீவரத்தினம் சாலையில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் வேலை செய்யவில்லை, அதே போன்று காசி கார்டன் தெருவில் திருடப்பட்ட இரு சக்கர வண்டி திருடிய குற்றவாளியை 1 மாதா காலம் ஆகியும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஏன் என்றால் அந்த பகுதியில் உள்ள எந்த கேமராவும் வேலை செய்யவில்லை, சூரியநாரயணன் செட்டி மெயின் ரோட்டில் உள்ள எந்த கேமராவும் வேலை செய்யவில்லை, இதனால் இந்த சூரியநாரயாண செட்டி மெயின் ரோட்டில் நடக்கும் பெரிய விபத்துக்களில் கூட புலன் விசாரணைகள் தோல்வி அடைந்து வருகின்றது. இராயபுரம் N.1காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட மன்னார் சாமி கோவில் மெயின் ரோட்டில் நடைபெறும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் நின்று கொண்டிருக்கிறது.
காவல் நிலையங்களில் புகார் அளிக்க சென்றால், பெரும்பான்மையான காவலர்கள் பகல் நேரங்களில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணிக்கும் வெளி இடங்களுக்கும் சென்றுவிடுவதால் காவல் நிலையங்கள் காலியாக கிடக்கின்றது.
குற்ற செயல்கள் அதிகம் நடக்கும் முக்கிய காவல் நிலையங்களான N.2, N.4, N.1,போன்ற காவல் நிலையங்களுக்கு திறமையான அதிரடி காவலர்களையும், கூடுதல் காவலர்களை பணியில் நியமிக்க வேண்டும்.
காவல்துறையில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு காவல் நிலையங்களில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடாமல் இருப்பதால் தான் பல்வேறு குற்றச் செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது.
காசிமேடு N.4 மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் உட்பட்ட மீன்பிடி துறைமுகத்திற்க்கு இரவு 9.00 மணிக்கு மேல் இரவு பணி காவலர்கள் ரோந்து பணிக்கு ஆள் இல்லை
பல காவல் நிலையங்களில் குற்ற பிரிவில் 2 அல்லது 3 காவலர்களே பணியில் இருப்பதால் குற்ற செயல்களை தடுக்கவோ குற்றவாளிகளை பிடிக்கவோ முடியவில்லை.
காவல் துறை தலைவர் மற்றும் காவல் துறை ஆணையாளர் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என்று சொல்கின்றார்கள்..
சென்னை மாநகராட்சிக்குள் டீ கடை அல்லது பெட்டி கடை நடத்த வேண்டும் என்றால் கூட பயமாக இருக்கின்றது. அந்த அளவிற்கு இன்றைக்கு குற்ற செயல்கள் பெருகிவிட்டது. காவல் துறையில் போதிய பணியாளர்கள் இல்லை சாதாரண விசயத்திற்கு கூட நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது. இதனால் நிதீமன்றங்களில் வழக்குகள் குவிந்துக்கொண்டு இருக்கின்றது.
வண்ணாரப்பேட்டை காவல் சரகத்திற்க்கு கூடுதல் காவலர்களை, கூடுதல் காவல் நிலையமும் தேவை ஏன் என்றால் மக்கள் தொகை அதிகமாக மிக நெருக்கமான பகுதி
ஆகவே சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்களும், சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்களும் இணைந்து உடனடியாக பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சரி செய்தும் குற்றமே நடைபெறாத மாநரகமாக மாற்றவும், தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியில் சரி செய்யவும், அல்லது மாமன்ற உறுப்பினர்கள் நிதியில் சரி செய்யவும், அல்லது பெரிய நிறுவனத்தின் CSR பண்டுகள் மூலம் சரி செய்து நாள் தோறும் பராமரிக்க அதற்கான ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து குற்றம் செய்ய வழி வகை இல்லா மாநகரமாக உருவாக்க வேண்டும் என்று அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கின்றேன்.













