இலங்கை அரசு இந்திய கருவாடுகளுக்கு தடை வித்துள்ளது அதை நீக்கக்கோரி மத்திய மாநில அரசுக்கு அகில இந்திய மீனவர் சங்கம் கோரிக்கை!

0
406

சென்னை பிப்ரவரி 7 ராயபுரத்தில் உள்ள அகில இந்திய மீனவர் சங்க அலுவலகத்தில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் கொரோனா தொற்றுநோய் போது சென்னையில் சிறப்பாக பணியாற்றிய அகில இந்திய மீனவர் சங்கத்தின் துணை செயலாளர் தெய்வானையை மாநகராட்சி சார்பாக சான்றிதழ் மற்றும் விருது வழங்கினார் அதை இன்று அகில இந்திய மீனவர் சங்க அலுவலகத்தில் அவருக்கு வழங்கி அகில இந்திய மீனவர் சங்க நிர்வாகிகள் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் p. ரவி டி.எம்.ஜ. லயன் மனோகர் ஜி மாநில பொதுச்செயலாளர், ஆர்கே நகர் தொகுதி செயலாளர் முருகன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ். எம். பாஸ்கர் மாநிலத் துணைச் செயலாளர் அமரன், தெய்வானைக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.அதன்பின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி தெரிவித்ததாவது இந்தியாவில் உள்ள 10 கடலோர மாநிலத்திலிருந்து மீனவர்கள் பிடித்து வரும் மீன்களில் சுமார் 17% சதவீதம்மீன்கள் பதப்படுத்தப்பட்டு உயர்ரக கருவாடாக பல்வேறு முன்னணி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன தற்போது அண்டை நாடான இலங்கை இந்தியாவிலிருந்து வரும் மீன்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட மாசி கருவாடுகள், கட்டாககருவாடு, தள பாத்துகருவாடு,கரடி, கொபரகருவாடு, வண்ணாத்தி கருவாடு, சென்னா குணி, நெத்திலி கருவாடு உட்பட பல மீன் மற்றும் கருவாடு வகைகள்ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது இதனால் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவாடுகள் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் தேக்கம் அடைந்துள்ளது கடந்த நவம்பர் 2020 முதல் இந்தியாவில் இருந்து மீன் மற்றும் கருவாடு வகைகள் இறக்குமதி செய்வதை இலங்கை தடை விதித்துள்ளது கருவாடு களுக்கு மூன்று மடங்கு வரியும் விதித்துள்ளது. ஏற்கனவே ஒரு கிலோ கருவாடு க்கு 100 ரூபாய் வரி இருந்ததை தற்போது 300 ரூபாயாக உயர்த்தி இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் அதாவது மாலத்தீவு மற்றும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி போன்ற பகுதிகளிலிருந்து இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது இலங்கையின் இந்த கூடுதல் வரி விதிப்பு மற்றும் இறக்குமதிக்கு தடை போன்ற காரணத்தினால் ஏற்றுமதியாளர்கள் மட்டுமில்லாமல் மீன்களைப் பிடித்து வருகின்ற மீனவ மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் கருவாடு ஏற்றுமதித் தடையால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவே கருவாடு ஏற்றுமதியை ஊக்குவிக்க மானிய விலையில் குளிர்பதன கிடங்குகள் கட்டவும் உபகரணங்கள் வாங்கவும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்கத் தொகைகளை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் தூத்துக்குடியில் தற்போது தேக்கம் அடைந்துள்ள சுமார் 15 ஆயிரம் டன் கருவாடுகள் சுமார் ரூபாய் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருப்பு இருக்கின்றது இந்த கருவாடுகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இலங்கையுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடியில் வாடகை குளிர்பதன கிடங்குகளில் கருவாடுகள் பல மாதங்களாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக ராஜ்ஜிய ரீதியான உறவுகளை பலப்படுத்த இந்திய கலாச்சார உணவு வகையும் இலங்கை கலாச்சார உணவு வகையும் மான கருவாடு வகையை சார்ந்த மீன் கருவாடு களை அந்நாட்டில் இறக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு தெரிவித்து போர்கால அடிப்படையில் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி இது போன்ற தடைகள் வருங்காலத்தில் ஏற்படாமலும் தற்போது உள்ள தடைகளை விலகி இந்தியாவின் மீன் மற்றும் கருவாடு வகைகளை இலங்கையில் இறக்குமதி செய்யவும் மூன்று மடங்கு இன் இறக்குமதி வரியை குறைக்கவும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மீனவர் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here