நேர்முகத்தேர்வில் உங்களிடம் கேள்வி கேட்பவர்கள், நீங்கள் சரியாக பதிலளிக்கிறீர்களா அல்லது தவறாக பதிலளிக்கிறீர்களா என்பதை மட்டும் கவனிப்பதில்லை. கூடுதலாக, அவர்கள் கேள்வி கேட்டவுடன், பதிலளிக்க நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பார்க்கிறார்கள்.
அதாவது, விரைவாக பதில் சொல்கிறீர்களா? அல்லது தாமதமாக பதில் சொல்கிறீர்களா? என்பதை கவனிக்கிறார்கள். இதன்மூலம், உங்களின் விழிப்புத்திறன் (ச்டூஞுணூtணஞுண்ண்) சோதிக்கப்படுகிறது. அதற்காக, விரைவாக பதிலளிக்கிறேன் என்ற பேரில், முந்திரிக்கொட்டைப் போன்று, அவர் கேள்வியைக் கேட்டு முடிக்கும் முன்பாகவே, நீங்கள் பேசத் தொடங்கிவிடக்கூடாது. இதன்மூலம், உங்களின் மதிப்பு பெருமளவில் குறைந்துவிடும்.
அவர்கள் கேட்கும் கேள்வியில் உங்களுக்கு தெரியாதவற்றை, தயக்கமின்றி, தெரியாது என்று ஒத்துக்கொள்ளுங்கள். யோசிக்கிறேன் என்ற பெயரில் நேரத்தைக் கடத்தக்கூடாது. தெரியாது என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்வதன் மூலம், கமிட்டி உறுப்பினர்கள் அடுத்தக் கேள்வியை கேட்பதற்கு தயாராகலாம்.
சில கேள்விகளுக்கு, நீங்கள் மிகச் சரியாக பதிலளித்தபோதும் கூட, உங்களை குழப்பி, உங்களின் விழிப்புணர்வை சோதிக்கும் வகையில், நீங்கள் அளித்த பதில் சரி என்று நினைக்கிறீர்களா? என அவர்கள் உங்களை மடக்க முயற்சிக்கலாம்.
அதுபோன்ற நேரத்தில், உங்களின் பதில் சரி என்று தெரிந்தால், ஆம், நிச்சயமாக, 100% சரி என்று நம்பிக்கையுடன் கூற வேண்டும். அதைவிடுத்து, சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம் என்று சொல்லக்கூடாது. இவ்வாறு கூறும்போது, நீங்கள் எதிலுமே உறுதியில்லாதவர் மற்றும் குறைந்தபட்சம் உங்களின் சொந்த பதிலில்கூட சரியான தெளிவின்றி இருக்கிறீர்கள் என்று அவர்கள் நினைக்க வழியேற்படும்.
மேலும், இப்படிப்பட்ட ஒருவரிடம், நம்பிக்கையுடன், எப்படி ஒரு பொறுப்பை ஒப்படைப்பது என்று அவர்கள் யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால், உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணி வாய்ப்பு, பறிபோகும் நிலை ஏற்படும்.
நேர்முகத் தேர்வின் போது எப்படி அமர வேண்டும் என்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமான விஷயம். நாற்காலியின் நுனியிலோ அல்லது நன்கு சாய்வாகவோ அமரக்கூடாது. உங்களின் முதுகுத் தண்டுவடம் நேராக இருக்கும் வகையில் அமர வேண்டும் மற்றும் உடல் நடுங்கக்கூடாது.
சிலருக்கு, பதற்றத்தில் கைகள் நடுங்கும். நேர்முகத் தேர்வு என்பது உயிரைப் பறிக்கும் போர்க் களமல்ல. அது ஒரு சாதாரண செயல்பாடுதான் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, பதற்றமும், பயமும் தேவையில்லை. நமது கைகளை எதிர் மேசையில் வைக்கக்கூடாது. நாற்காலியின் கைகளின் மேலேயே வைத்துக்கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வின்போது, அவர்கள் கேட்கும் கேள்வியானது உங்களுக்கு சரியாக கேட்கவில்லை அல்லது புரியவில்லை என்றால், ஆஞுஞ் தூணிதணூ ணீச்ணூஞீணிண ண்டிணூ என்றுதான் கேட்க வேண்டுமேயொழிய, மிகவும் சாதாரணமாக கீஞுணீஞுச்t ணிணஞிஞு ச்ஞ்ச்டிண ண்டிணூ என்பதாக கேட்கக்கூடாது.
நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது, உடையலங்காரம் என்பது மிகவும் முக்கியம். நன்றாக அயர்ன் செய்த, ஊணிணூட்ச்டூ உடையை அணிந்து செல்ல வேண்டும். கூதஞிடு டிண செய்து, ஷபி அணிந்து செல்வது முக்கியம், மோதிரம் உள்ளிட்ட அணிகலன்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களைப் பொறுத்தவரை, கவர்ச்சியற்ற சுடிதார் மற்றும் சேலை போன்றவை சிறந்தவை. ஃடிணீண்tடிஞிடு மற்றும் அதிக மேக்கப் இல்லாமலும், மிகவும் உயரமான ஏஞுஞுடூண் செருப்பு அணியாமலும் இருத்தல் நலம். அதேபோன்று, பட்டுச்சேலை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு அறைக்குள் செல்லும்போது, கோயில் அல்லது வீட்டிற்குள் செல்வதைப்போல், ஷபி அல்லது செருப்பை கழற்றிவிட்டு செல்லக்கூடாது. இதன்மூலம், உங்களின் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் இருப்பதோடு, சரியான நடத்தை முறைகளையும் பின்பற்றுதல் முக்கியம்.
உங்களின் நேர்முகத் தேர்வு நேரத்தின்போது, தேநீர் இடைவேளை நேரம் குறுக்கிடலாம். எனவே, நேர்முகத் தேர்வு அறைக்குள், அங்கிருக்கும் அனைவருக்கும், உங்களுக்கும் சேர்த்து, தேநீர் கொண்டுவரப்பட்டு பரிமாறப்படும். உங்களுக்கு தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்தால், தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக, இதுபோன்ற நேர்முகத்தேர்வு செயல்பாடுகள், தேநீர் இடைவேளை என்ற காரணத்திற்காக, நிறுத்தப்படாது. அனைவரும் தேநீர் எடுத்துக்கொண்ட பின்னர், தொடர்ந்து நடைபெறும். அதுபோன்ற நேரங்களில், பொதுவாக, சாதாரண முறையிலான கேள்விகளே கேட்கப்படும். சீரியஸ் கேள்விகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
இதுபோன்ற நேரங்களிலும் நீங்கள் கவனமாக செயல்படுவது முக்கியம். தேநீர் அருந்துகையில், உங்களின்மீது பதட்டத்தில், தேநீர் சிந்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், குடித்துவிட்டு கோப்பையை வைக்கும்போது, அதிக சத்தமாக வைக்கக்கூடாது மற்றும் கோப்பை தவறி கீழே விழுந்துவிடக்கூடாது.
மேலும், தேநீர் அருந்தி முடித்தப்பின்னர், மேசையின் மீது சிறிது தேநீர் துளிகள் சிந்தியிருக்கலாம். எனவே, உங்களின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கும்போது, நீங்கள் கவனிக்காமல் அதன்மீது வைத்துவிடக்கூடாது மற்றும் உங்கள் எதிரே அமர்ந்திருக்கும் கமிட்டியினர் குடித்து முடித்து, மேசையின்மீது வைத்திருக்கும் காலி கோப்பைகளை தள்ளிவிட்டுவிடவும் கூடாது.
எங்கும் கவனம், எதிலும் கவனம், எப்போதும் கவனம். இதுதான் நேர்முகத் தேர்வின் வெற்றிக்கான தாரக மந்திரம்.









