




சென்னை- காலடிப்பேட்டை வார்டு 12 இல் சாத்துமா நகர் எல்லையம்மன் கோயில் அருகில் மேட்டு தெரு,திலகர் நகர் சேரும் இடத்தில் 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிழல் கொடுத்த வன்னி மரம் அங்கு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது முறிந்து கீழே விழுந்தது. அதிஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அருகில் இருந்த மின்கம்பமும் குடிநீர் வாரிய பம்பும் சேதம் அடைந்தது. உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த இடத்துக்கு வந்த 12- வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வேறுடன் சாய்ந்த மரத்தை மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்தனர்.
















