20 வருடம் கழித்து மின்விளக்குகள் அமைக்காமல் க கட்டபட்ட மேம்பாலம் இரண்டு கிராம மக்கள் அவதி
குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு 100 கோடி மதிப்பீட்டில் அப்போதைய திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
மோர்தானா அணையின் முழு உயரம் 23.89 மீட்டர். நீர் தேக்கத்தின் அளவு 11.50 மீட்டர். நீர் தேக்கத் தின் நீளம் 475 மீட்டர். அணையின் கொள்ளளவு 261.36 மில்லியன் கனஅடி. அணையில் இருந்து பொதுக்கால்வாய், இடது புறக்கால்வாய், வலது புறக்கால்வாய் என 3 பிரிவுகளாக பாசனத்துக்காக கால்வாய் உள்ளன. இதன் வழியாக கிளைக் கால்வாய்கள் மூலம் சென்று ஏரிகளில் நிரும்புகிறது இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பயன்படுகின்றன.
இந்நிலையில் அன்னையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே ஆற்றில் இறங்கிதான் போடி பேட்டை ராகிமான பள்ளி ஆகிய இரண்டு கிராமத்துக்கும் செல்ல வேண்டும் மழைக்காலங்களில் மோர்தனனை நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் கவுண்டர் ஆற்றின் வழியாக செல்லும்போது மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் அவசரத்திற்கு மருத்துவமனைக்கோ அத்தியாவசிய பொருட்களை வாங்குவோம் வரமுடியாமல் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வந்தன.
இதை அடுத்து இதுபோன்ற மழை காலங்களில் அத்தியாவசிய தேவைக்கு வரும் வகையில் மூங்கில் பாலம் கட்டப்பட்டு அதன் வழியாக வந்து சென்றனர்.
தொடர்ந்து அப்பகுதியைச் சென்ற மக்கள் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் முதல், அமைச்சர் முதல்வர் தனிப்பிரிவு என தொடர்ந்து மனுக்களை அனுப்பியும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆண்டு கணக்கில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே கடந்த 2021- 2022 ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் கவுண்டன்னிய மகாநதி ஆற்றின் குறுக்கே போடி அப்பனூர் செல்லும் வகையில் உயர் மட்ட மேம்பாலம் ரூ. 4.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான பணிகள் மே மாதம் 2022 மே மாதம் 30ம் தேதி தொடங்கி நடந்து வந்தது எடுத்து 2023 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில் மின்விளக்குகள் அமைக்காததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வீடு திரும்பும் தொழிலாளர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் அச்சத்துடனே அந்த பாலத்தை கடந்து வருகின்றனர் மேலும் வனத்துறை ஒட்டி அந்த கிராமம் இருப்பதினால் எந்த நேரத்தில் வனவிலங்குகள் வரும் என்றே தெரியாத நிலையில் சாலையைக் கடந்து செல்கின்றனர் எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு கிராம் மலை சேர்ந்த மக்கள் அச்சமின்றி செல்லும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில் மின்விளக்குகளை பொருத்த அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
















