சென்னை மாநகராட்சி மாறி வருகிறது – துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்;

0
193

சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டமானது தற்போது சாத்தியம் பட்டு வருகிறது  செ ன்னை பட்டணம் என்ற மாநகரம் தற்போது எல்லாருடைய மாநகரமாக திகழ்கிறது

ஹேப்பனிங் சிட்டியாக சென்னை மாநகராட்சி மாறி வருகிறது – துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடம் வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில், முடிவுற்ற 17 புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்து, 493 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 559 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி,பேருரை ஆற்றினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, த.மோ.அன்பரசன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு. மற்றும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபன் ஆகியோர் பங்கேற்ற்றுள்ளனர், தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர்கள்,,,,

அமைச்சர் கே.என். நேரு பேச்சு:-

சென்னை மாநகராட்சி மேம்படுத்த இரவும் பகலமாக 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உழைத்து வருகின்றனர்

சென்னையில் பெரும்பாலான சாலைகள் புதுப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னையில் உள்ள பல்வேறு ஏரிகள் துருவரப்பட்டு வருகிறது

கடந்த ஆட்சியில் தாழ்வான பகுதியில் தேங்கி இருந்த மழை நீர் வடிய 5 முதல் 10 நாட்கள் ஆகும் ஆனால் தற்போது
இரண்டு அல்லது மூன்று நாட்களில் மழை நீர் வடிகிறது

கடந்த ஆட்சியில் குடிநீர் பற்றாக்குறை இருந்தது ஆனால்
தற்போதைய காலகட்டத்தில் தினந்தோறும் 1200 லாரிகள் மூலம் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது

நிலத்தடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது

வாய்க்கால் பகுதிகளில் தூர்வாரப்படாத இருந்த குப்பைகள் இந்த அரசு பொறுப்பு ஏற்று தீவிர மூலையில் அகற்றப்பட்டு வருகிறது

சென்னையில் உள்ள 200 கவுன்சிலர் விட கவுன்சிலர்களை அதிகரிக்க ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது, முதலமைச்சர் அனுமதி கொடுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள் போல் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது

பெரும்பாலும் சென்னை மாநகராட்சி பள்ளிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது ஐந்து இடங்களில் புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது

இந்தியாவில் இருக்கக்கூடிய நான்கு மாநகராட்சிகளில் பெரிய மாநகராட்சியாக சென்னையை மாற்ற பணிகள் செய்து வருகிறோம். சிங்காரச்சென்னையை மேலும் விரிவுபடுத்த திட்டம்

அமைச்சர் உதயநிதி மேடைப்பேச்சு :-

மழை வெள்ளத்தில் கூட பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த அரசு சிறப்பான முறையில் செயல்பட்டது. அமைச்சர் நேருவிடம் ஏதேனும் பொறுப்பை ஒப்படைத்தால் அது 50 சதவீதம் நிறைவு பெற்றதாக அர்த்தம்

நவம்பர் மாதம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மழையில் சிறப்பாக பணியாற்றினார்கள். சென்னை என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது வந்தாரை வாழவைக்கும் சென்னை தான் என்று

சென்னை பட்டணம் என்ற மாநகரம் தற்போது எல்லாருடைய மாநகரமாக திகழ்கிறது. சென்னையில் முதல் முதலாக மேம்பாலம் கட்டிய அரசு திமுக அரசு தான்.சென்னையில் டைட்டில் பார்க் மற்றும் ஐடி நிறுவனங்களைக் கொண்டு முதன்மை மாநிலமாக மாற்றியது கலைஞர் தான்

சென்னை மாநகரம் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து வருகிறது.
சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டமானது தற்போது சாத்தியம் பட்டு வருகிறது. சென்னையின் வளர்ச்சி பணிகளை 6000 கோடியில் செயல்படுத்தி வருகின்றனர், தற்போது ஹேப்பனிங் சிட்டியாக சென்னை மாநகராட்சி மாறி வருகிறது

மக்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், பூங்கா விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு திட்டங்கள் ஒரே இடத்தில் கிடைக்கிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் 1012 பணிகள் 901 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது

280 கோடி மதிப்பீட்டில் 493 பணிகளுக்கு அடிகள் நாட்டப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 225 குளங்கள் உள்ள நிலையில் மேலும் 41 குளங்கள் உருவாக்கும் பணிகள் தீவிரம்

நீர்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான் 15 சென்டிமீட்டர் மழை பெய்தும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை, நிலத்தடி நீர் உயர்த்தும் பணியில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. நிருபர்.. விக்னேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here