எழுத்தாளரும் – பத்திரிகையாளருமான திரு.முரசொலி செல்வம் மறைவு..!CHENNAI PRESS CLUB ஆழ்ந்த இரங்கல்…

0
188

கலைஞரின் அக்கா மகன், முரசொலி மாறனின் தம்பி, கலைஞர் மகள் செல்வியின் கணவர் என்ற குடும்ப உறவின் பின்னணியையும் தாண்டி திமுகவின் அறிவார்ந்த சொத்தாகக் திகழ்ந்தவர் முரசொலி செல்வம்.

முரசொலி நாளிதழ் 80 ஆண்டுகளைக் கடந்த தனது பயணத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகளை, தாக்குதல்களை, கைது நடவடிக்கைகளை தொகுத்து ‘முரசொலி – சில – நினைவுகள்’ என எழுதினார். இதழியல் துறையில் துணிவுடன் செயல்பட ஆர்வமுள்ளவர்களுக்கு அது மிகச் சிறந்த கையேடு ஆகும். தனது 82 வயதிலும் கொள்கை உறுதிமிக்க பத்திரிகையாளராக செயல்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் இளையவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளையும் உற்று கவனித்து, அவற்றை முரசொலியில் வெளியிடச் செய்து ஊக்கப்படுத்தியவர். 50 ஆண்டுகால அரசியல் நிகழ்வுகள் குறித்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக தெளிவுபடுத்தக் கூடியவர்.

ஆசிரியர் முரசொலி செல்வம் அவர்களின் மறைவால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தாருக்கும், அரசியல் மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் இந்த தருணத்தில் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கும் CHENNAI PRESS CLUB உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரின் சார்பிலும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

(அ.செல்வராஜ்
தலைவர்)  (ச.விமலேஷ்வரன்
பொதுச் செயலாளர்)

CHENNAI PRESS CLUB –
சென்னை பிரஸ் கிளப் ( Reg.No.425/2021)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here