போதையில் ஆபாச வார்த்தையால் கிண்டல் கேலி செய்த ஆத்திரத்தில் பிரபல ரவுடியை தீர்த்துக்கட்டிய கும்பல் கைது தப்பி ஓடிய பிரபல ரவுடிக்கு கையில் முறிவு;

0
313

சென்னை, திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர்,வரதராஜ பெருமாள் நகரை சேர்ந்தவர் ராஜசேகர், இவரது மகன் லோகேஷ்(32), இவர் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சி பிரிவு ரவுடி, இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை, தன்னடயார் பேட்டை, ராயபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 11ம்‌ தேதி அன்று, நண்பர்கள் சிலர் மது அருந்த லோகேஷை அழைத்துள்ளனர். இதனால் அன்று, புதுவண்ணாரப்பேட்டை, பாலகிருஷ்ணா நகர் குறுக்கு தெரு, மாடர்ன் பள்ளி எதிரில் வந்துள்ளார். அங்கு வந்த சில நண்பர்களுடன், லோகேஷ் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின் அங்கு போதையில் ஏற்பட்ட தகராறில், கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் லோகேஷை சாரா மாறியாக வெட்டிக்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து,சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் மேற்பார்வையில் திருவொற்றியூர் உதவி கமிஷனர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆறு பேர் கொண்ட கும்பலை தேடிவந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர் விசாரணையில் அவர்கள்,புதுவண்ணாரப்பேட்டை,நாகூரான் தோட்டத்தை சேர்ந்த மண்டை பிரகாஷ்(38), இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. புதுவண்ணாரப்பேட்டை, அண்ணா நகரை சேர்ந்த பிரகாஷ்(25), தண்டபாணி(30),திருவொற்றியூர், சாத்துமா நகர் , காந்தி நகர்ன் மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில், கானாங்கத்த ராஜை, மண்டை பிரகாஷ் அடித்துள்ளார். அப்போது, லோகேஷ், மண்டை பிரகாஷை தாக்கி அவரை அசிங்கமாக பேசியது மட்டுமல்லாமல் கிண்டல் செய்துள்ளார். தன்னை விட வயது குறைவாக உள்ள லோகேஷ், அடித்து, அசிங்கமாக கிண்டல் செய்தது, மண்டை பிரகாஷ்க்கு ஆத்திரத்தை மூட்டியது. இதனால் கூட்டாளிகளை வைத்து லோகேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று, மண்டை பிரகாஷ் நட்பாக பேசி, லோகேஷை மது அருந்த அழைத்துள்ளார். லோகேஷ் அங்கு வந்ததும், மண்டை பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் துணையோடு ,அவரை வெட்டிக்கொன்றது தெரிந்தது. மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதாவது காரணமா என விசாரிக்கின்றனர். கொல்லப்பட்ட லோகேஷ், சிறையில் உள்ள பிரபல ரவுடிகள் ஈசா(ஏ) ஈஸ்வரன், எலி யுவராஜ் கூட்டாளி என போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனால், கைதாகி சிறைக்கு சென்றுள்ள மண்டை பிரகாஷ் அவரது கூட்டாளிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என அவரது உறவினர்கள் அஞ்சுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here