காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ;

0
208

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று ரூ. 3.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் த .மாலதி, குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா. சுனில் குமார், மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here