சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை- இதற்கு தீர்வு தான் எப்போது ;

0
293

சென்னை ஆர் கே நகர் பகுதி கொருக்குப்பேட்டை 42 வது வார்டு  இளைய  முதலி  தெருவில்  பல ஆண்டுகளாக ரோட்டில் குப்பை அதிகமாக   கொட்டி  இருப்பதை  படத்தில் காணலாம் இந்த பகுதி மக்கள் 42 வது வார்டு சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை பொதுமக்களாகிய நாங்கள் யாரிடம் முறையிடுவது மாண்புமிகு முன்னாள் முதல்வர் இருந்தபோது இதுபோல் ஏதாவது புகார் என்றால் உடனுக்குடன்  நடவடிக்கை  எடுப்பார்கள் இப்போது அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் அதேபோல் இந்த பகுதி  மக்களுக்கு  அடிக்கடி காய்ச்சல் வருகின்றது ஏற்கனவே வந்த கொரோனா பாதிப்பு இப்போதுதான் மீண்டு இருக்கிறார்கள் மக்கள் அதேபோல் இந்தப் பகுதியில் யானைக்கால் டெங்கு காய்ச்சல் வந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள் ஆகவே இந்தப் பகுதியில் இருக்கும் குப்பையை   வேறு  இடத்துக்கு மாற்றி அமைக்கும்படி பொதுமக்களும் இந்த பகுதியை  சேர்ந்த  சமூக ஆர்வலரும் கோரிக்கை வைக்கின்றனர். இதற்கு மேலாவது  சம்பந்தப்பட்டவர்கள்  நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here