திருமண ஆசை காட்டி பதினாறு வயது சிறுமியுடன் ஓட்டம் பிடித்த ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்த போலீசார்;

0
208

சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வரும் 16 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 9 ஆம் தேதி அன்று அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் போலீசாரின் விசாரணையில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அதே பகுதியை சேரந்த 28 வயதான மகேஸ்வரன் என்பவர் அழைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது

இதனையடுத்து இவ்வழக்கானது இராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் ஆய்வாளர் மணிமேகலை தலைமையில் சிறுமி திருவேற்காட்டில் உள்ள தனது தோழியின் வீட்டில் இருந்ததை கண்டுபிடித்து அவரை மீட்டுள்ளனர்

மேலும் ஆசை வார்த்தை காட்டி அழைத்து வந்த நபரை மோர் மார்கெட்டில் ஆட்டோ ஓட்டி கொண்டிருந்தபோது கைது செய்துள்ளனர் பின்னர் அவர்மீது போக்சோ சட்டம் பதியப்பட்டு சிறைக்கும் சிறுமியை காப்பகத்திற்கும் போலீசார் அனுப்பிவைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here