திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் மீன் வளத்துறை அமைச்சரும், மாநில மீனவர் அணியின் முன்னாள் செயலாளருமான கே.பி.பி.சாமி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பாரம்பரிய திமுக குடும்பத்தில் பிறந்து தனது பகுதி மட்டுமல்லாம் ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் என்று பாராட்டப்பட்டவர் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், முன்னாள் மாநில மீனவரணி செயலாளருமான கே.பி.பி.சாமி.
திருவொற்றியூர் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளராக, நகர கழக துணை செயலாளராக, தலைமை கழக செயற்குழு உறுப்பினராக, மாநில மீனவரணியின் செயலாளராக கழகத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து மக்கள் பணியாற்றியவர். 2006 மற்றும் 2016 என இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2006ல் அய்யா கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை துவக்கியவர். திருவொற்றியூர் தொகுதியில் டைம்ஸ் ஆம் இந்தியா மூலம் அரசு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், நவீன எரியூட்டு மயானம், சூரை மீன்பிடி துறைமுகம், மேம்பாலங்கள், விம்கோ நகர் வரை மெட்ரோ இரயில் விரிவாக்கம் என என்னற்ற திட்டங்களை கொண்டு திருவொற்றியூரை மேம்படுத்தியவர் கே.பி.பி.சாமி. அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் *கே.பி.சங்கர்* அறிவுறுத்தவின்படி, 5வது வட்ட கழக செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான கே.பி.சொக்கலிங்கம் முன்னிலையில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி புகழஞ்சலி செலுத்தினார். தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ராமநாதன், 14வது வட்ட செயலாளர் ஆர்.சந்தர், பி.எஸ்.சைலேஷ், ஆர்.தேசிங், பிரகாஷ், சிவா, அல்லி முத்து, பால உமாபதி, வைகை சிவா, ஸ்ரீதர், இரா.கணேசன், கிரிதரன், சரவணன், ராதா தங்கவேல், ஆர்.பிரபா, டெய்லர் மணி, விஜயலட்சுமி, ரமேஷ், பாரூக், வசந்த், கபடி குமார், ஜெயராம், ராஜவேல், அசோக், காந்திநகர் செல்வம், ஜோதி, தன்ராஜ், இளங்கோ, கொள்கைமணி, எல்லப்பன், முத்து, சதீஷ், பிரவீன், சண்முகம்,ராம், சங்கர், ராஜசேகர், மதுரை முத்து,ஜோதி, பால்ராஜ், ராபின், தங்கராஜ், சரவணன் மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.


திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் மீன் வளத்துறை அமைச்சரும், மாநில மீனவர் அணியின் முன்னாள் செயலாளருமான கே.பி.பி.சாமி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.











