ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப பெற மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் : தேசிய முன்னேற்ற கழகம் –

0
382

ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப பெற மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் : தேசிய முன்னேற்ற கழகம் முடிவு
நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா வெளியிடும் அறிக்கை :
நேற்றைய தினம் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் கவர்னர் ரவி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: சனாதனமும் மதமும் வேறு, வேறு; சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர்.
காந்தி, விவேகானந்தர் கூறிய ஆன்மிக வழியில் நாடு சிந்திக்க, செயல்பட துவங்கியுள்ளது. சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பின்மைக்கும் வெளியே போதிக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் எனக் கூறுவது சனாதன தர்மம் இல்லை. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதே போன்று கொரோனா எனும் பெரும் தொற்றில் உயிரிந்த உடல்களை அவரது குடும்பத்தினர் தொட மறுத்த நிலையில், தங்களது இன்னுயிரையும் துச்சம் என நினைத்து, இந்து சகோதரர்களின் உடல்களை அடக்கம் செய்தவர்கள் ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு. 2015 பெருவெள்ளம், கஜா புயல் என பல்வேறு பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்ற ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது அவதூறு கருத்து கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி.
தொடர்ந்து தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மதவாதத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் எனக் கூறுவது சனாதன தர்மம் இல்லை என இஸ்லாமிய சமுதாயத்தை மறைமுக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியிலிருந்து விலகி விடுவது நல்லது.
மதபிரசாரம் செய்து வரும் பணியை முழுநேரமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைத்த சட்டமசோதாக்களுக்கு அனுமதி அளிக்க மட்டும் நேரம் இல்லை என்பது தான் வேதனை அளிக்கக்கூடிய விஷயம். ஆர்.என்.ரவி அவர்கள் இனியும் தமிழக ஆளுநராக நீடித்தால், தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் கரும்புள்ளி ஏற்படுத்தி விடும்.
ஆகவே ஆர்.என்.ரவி ஆளுநர் பதவிலிருந்து திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சி தலைவர்களையும், பொதுமக்களையும் சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி, அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க தேசிய முன்னேற்ற கழகம் தீர்மானித்துள்ள என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here