காசிமேடு கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு;

0
202

சென்னை தண்டையார்பேட்டை, நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ஏஜாஸ் வயது 17 அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்

இந்நிலையில் சக மாணவர்கள் மூன்று பேருடன் சேர்ந்து காசிமேடு கடல்கறையில் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது ராட்சச அலையில் ஏஜாஸ் மட்டும் சிக்கியதாக கூறப்படுகிறது இந்நிலையில் உடன் குளித்துக் கொண்டிருந்த மூன்று கல்லூரி மாணவர்களும் உடனடியாக ஏஜாஸின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்

ஏஜாஸின் பெற்றோர்கள் இதுகுறித்து அருகிலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் காணாமல் போன கல்லூரி மாணவன் ஏஜாஸை நேற்று தேடி வந்தனர்

இந்நிலையில் இன்றும் தீவிரமாக தேடிவந்த நிலையில் கடலின் உட்புறம் உள்ள மண்புதைவில் மாட்டிக் கொண்டிருந்த ஏஜாஸின் உடலை வெளியில் கொண்டு வந்தனர் பின்னர் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here