தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு ;

0
201

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் வரவேற்றனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு ஐ.என்.எஸ் விமானப்படை தளத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, அவர் அடையாறு ஐ.என்.எஸ் விமான தளத்திலிருந்து காரில் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வரும் வழி நெடுக பல்வேறு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here