முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை மே 28ம் தேதி திறப்பு-குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்;

0
337
The Chief Minister of Tamil Nadu, Shri M. Karunanidhi, the Union Minister for Shipping, Road Transport and Highways, Shri T.R.Baalu, the Union Minister for Communications and Information Technology, Shri A. Raja and other dignitaries are at the inauguration ceremony of 54th meeting of the National Development Council, in New Delhi on December 19, 2007.

திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்குத் தனியாகச் சிலை அமைக்கப்படும் என்றும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி சுமார் 1.50 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்படுகிறது. இப்போது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை, பீடம் அமைக்கும் பணிகள் பொதுப்பணித்துறை மூலமாக நடைபெறுகிறது. கருணாநிதிக்கு இதுவரை அமைக்கப்பட்ட சிலைகளில் அதிக உயரமாக 16 அடியில் இந்த வெண்கலச் சிலையாக இது அமையவுள்ளது.இந்நிலையில், சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைய உள்ள இந்த கருணாநிதியின் சிலை வரும் மே 28ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிலையைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here