சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சார்ந்த அன்வர் சாஹிப் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 16 வயது பேத்தி காணவில்லை என்று வண்ணார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்
இந்நிலையில் அதே பகுதியைச் சார்ந்த 21 வயதான நசுருதீன் என்ற இளைஞரை கைது செய்து அவருடன் இருந்த அச்சிறுமியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்
















