திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையத்தில் அருகில் 40 வருடங்களாக காய்கறி கடை மளிகை கடை உள்ளிட்ட 140 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்து வந்த நிலையில் சுரங்க பாதை பணிக்காக அனைத்து கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் நடைபெற்று வருகிறது
கூடிய விரைவில் சுரங்க பணி துவங்க உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கடைகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் ஒட்டிய நிலையில் இன்று காலை 3 ஜேசிபி எந்திரம் உதவியுவடன் வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கடைகளை அப்புறப்படுத்த அந்த நிலையில் கடை உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மாற்று இடம் வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
மத்திய சென்னை ஆர் டி ஓ இளங்கோவன் திருவொற்றியூர்
தாசில்தார் மோகன் குமார்
மாதவரம் உதவி ஆணையர் அருள் சந்தோசம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னளையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனால் அந்த பகுதியை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது
கடைகளை இடித்ததால் வியாபாரிகள் ஆங்காங்கே சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.















