மழையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை :

0
259

மழையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க . ஸ்டானுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .

கொட்டிய மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் வீடுகள் சேதம் அடைந்து மக்கள் தங்க இடம் இல்லாமல் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகவே மழையில் சேதம் அடைந்து வீடுகளையும் சீரமைத்தும் பாதிக்க பட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும் தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .

தமிழகம் முழுவதும் கொட்டிய மழையின் காரணமாக பாதிக்க பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தகுந்த நடவடிக்கையை உடனடியாக மேற் கொள்ள வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.

மழையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம். மழையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மாண்பு மிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here