பட்டாசு வெடித்து சிதறியதில் தந்தை- மகன் பலி;

0
330

தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளிக்கு முந்தைய நாட்களிலேயே பட்டாசு போன்ற பொருட்களை பொதுமக்கள் கொள்முதல் செய்து வைத்து, இன்று குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.
பட்டாசு, இனிப்புகளை உறவினர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இன்று விழுப்புரம்- புதுச்சேரியில் எல்லையை ஒட்டியுள்ள கோட்டக்குப்பம் அருகே இரு சக்கர வாகனத்தில் தந்தை- மகன் ஆகியோர் பட்டாசு எடுத்து சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் தந்தை- மகன் வைத்திருந்த பட்டாசு எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here