வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று புழல் ஏரியில் தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
1999-ல் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார். அதற்கு பின்னர் கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியில் தமிழ்நாடு முதல்வர் நேரில் ஆய்வு.
இந்த ஆய்வின் போது புழல் ஏரி மற்றும் நீர்வழிப்பாதைகளில் முன்னெச்சரிக்கை பணிகளான
ஏரிகளில் நீர் இருப்பு, ஏரிகளின் மதகுகளின் உறுதிதன்மை, நீர் வழிப்பாதைகளில் ஆகாய தாமரை அகற்றுதல், கரைகளை பலப்படுத்துதல் குறித்து ஆலோசனை செய்தார்கள். இன்னும் 4ஆண்டுகளில் புழல் ஏரி கட்டப்பட்டு 150 வருடங்கள் ஆகப்போகிறது.
அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்ட தமிழக முதல்வர் ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தலாம் என்று கூறினார்.















