அரிசி குடோனில் பணிபுரிந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை போலீஸ் விசாரணை:

0
631

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அரிசி குடோனில் பணிபுரிந்த பட்டதாரி பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை தண்டையார்பேட்டை 4வது சந்து பகுதியை சேர்ந்தவர் சோலையப்பன் இவரது மகள் வரலட்சுமி வயது 21 தண்டையார்பேட்டை கேப்டன் மஹால் அருகே உள்ள அரிசி குடோனில் கடந்த 10 மாதங்களாக குவாலிட்டி டிபார்ட்மெண்டில் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு வந்த அந்த பெண் வீட்டிற்கு மதியம் 2 மணி அளவில் அரிசியில் வண்டு வராமல் இருக்க பயன்படுத்தும் மருந்து பவுடரை சாப்பிட்டுவிட்டு மயக்கமுட்டு இருப்பதாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வந்த வரலட்சுமி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனையடுத்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ள நிலையில் இன்றைய தினம் பெற்றோரும் உறவினரும் அரிசி குடோனை முற்றுகையிட்டனர் வரலட்சுமி விஷமருந்தி இருந்த போது அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாதது ஏன் என்றும் ஆம்புலன்ஸ்க்கு கூட போன் செய்யவில்லை என குற்றம் சாட்டி உரிமையாளரிடம் இதுகுறித்து கேட்டதற்கு கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என அலட்சியமாக பதில் கூறுவதாகவும் இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலட்சுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here