திருப்பூர் -கொங்கணகிரி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக்கடையின் அருகே ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கல்லூரி, பள்ளி, கோவில் ஆகியவை அமைந்துள்ளன.
இந்தநிலையில் மதுபிரியர்கள் குடித்துவிட்டு நடுரோட்டில் கிடப்பதால் பெண்கள் தெருக்களில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் அந்த கடையை உடனே அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த டாஸ்மாக் கடையை அரசு மூடாவிட்டால் தாங்களே முன்வந்து மூடும் சூழ்நிலை ஏற்படும் .
எனவே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தெற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன், தெற்கு மாவட்ட தலைவர் மணிகண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.













