பெறுநர்.
*மாண்புமிகு: டாக்டர் L.முருகன் அவர்கள்.*
*மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் அவர்கள்.*
*கமலாயம், சென்னை*
ஐயா,
பொருள்: *மத்திய அரசு கொண்டு வர இருக்கும் 2021 இந்திய கடல் மீன்வள மசோதாவை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.*
*நாடு முழுவதும் உள்ள மீனவர்களை சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தி மண்டல் கமிஷன் பரிந்துரையின் படி மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் ( S.T) யில் சேர்த்திடவும் ,*
*மீனவர்கள் பயன்படுத்தும் டீசல், மண்ணெண்ணெய்க்கும் அனைத்து வரிகளையும் விலக்கி மத்திய அரசு மானியத்துடன் வழங்க வேண்டும்,*
*கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடை காலத்தை அக்டோபர், நவம்பர் ,டிசம்பர் மாதத்திற்கு மாற்றியமைக்க வேண்டும்…*
*மாண்புமிகு:மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் அவர்களுக்கு*
*வணக்கம்!*
1. மத்திய அரசு கொண்டு வர இருக்கும் *இந்திய கடல் மீன்வள மசோதா 2021 ஆனது இந்திய பாரம்பரிய மீன்பிடி தொழிலுக்கும் , மீனவர்களுக்கும் எதிரானது.*
இந்திய கடலில் இந்திய மீனவர்கள் இந்திய மீன்களை பிடிக்க இந்தியாவிற்கு *இந்திய பாரம்பரிய மீனவர்கள் கட்டணம் கட்டவேண்டுமா?*
வெளி நாட்டுக்காரன் இந்திய கடலில் *இந்திய மீனை பிடித்தால் கட்டணம் கட்டவேண்டும் என்று சொன்னால் ஒரு நியாயம் இருக்கு*
அதை விட்டு விட்டு பாரம்பரிய மீனவர்கள் மீன் கூட்டத்தை கரையில் இருந்து பார்த்து விட்டு கடல் நீரோட்டத்தையும், காற்றின் வேகத்தையும் பார்த்து கூட்டமாக வருகின்ற மீன்களை மீன்வர்கள் பிடிக்க செல்லும் போது
மீனவர்கள் மத்திய அரசிடம் *ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க அனுமதி வாங்க வேண்டுமாம் ?*
மத்திய அரசிடம் அனுமதி வாங்கும் வரைக்கும் *அந்த மீன் கூட்டம் அங்கே நிற்குமா ?*
அந்த மீன் கூட்டம் அங்கேயே நிற்கும் என்பதற்கு *எந்த உத்தரவாதமும் இல்லை.*
12 கடல் மையில் தூரம் வரைக்கும் இயந்திரம் பொருத்தாத படகுகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது *என்று தேன் தடவப்பட்ட விஷ கத்தியை இதில் இடை சொல்லாக சொருகப்பட்டுள்ளது.*
இந்தியாவில் இயந்திரம் பொருத்தப்பாடாத *படகுகள் 0.5% சதவீகிதம் கூட இல்லாத படகுகளுக்கும், மீனவர்களுக்கு இதில் விதி விலக்கு என்று சொல்வது மீனவ மக்களை ஏமாற்றும் வேலையாக நாங்கள் கருதுகின்றோம் .*
*கடந்த காலங்களில் இதே மீன்வள மசோதாவை பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வர இருந்த போது*
*பாரம்பரிய மீனவ மக்களின் எதிர்ப்பு மற்றும் பல மாநில அரசுகளின் எதிர்ப்பு காரணமாகவும் அன்றைய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்*
*இந்த சட்டம் மீனவர்களுக்கு எதிரானது. எனவே இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டாம். என்று அவர் வாழ்நாள் முழுவதும் கொண்டு வர விடாமல் தடுத்தார்கள்.*
அதே போன்று தற்போதைய *திமுக வின் தலைவரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு ஸ்டாலின் அவர்களும்.*
*இந்த இந்திய கடல் மீன்வள மசோதா 2021 மீனவர்களுக்கு எதிரானது மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்றது. அதாவது தமிழகத்தில் தமிழக கடல் மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் 1983 விதியை மத்திய அரசு பறிக்கின்ற விதத்தில் இருப்பதால் இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.*
தமிழக அரசு சில திருத்தங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளதை கூட பாரம்பரிய மீனவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த *இந்திய கடல் மீன்வள மசோதாவை முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டிய சட்டம்.*
இது வெளி நாடுகளில் பொழுது போக்குக்கு மீன் பிடிப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டத்தை
*வாழ்வாதரத்திற்கு உயிரை பணையம் வைத்து மீன் பிடிக்கின்ற இந்திய பாரம்பரிய மீனவர்களை கொச்சைப்படுத்தும்* இந்திய கடல் மீன்வள சட்டம் என்று சொல்வதை மிக வண்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த இந்திய கடல் மீன்வள மசோதா 2021 சட்டமானது *நீடித்த நிலையான மீன்வளத்தை பெருக்குவது பற்றியோ, மீனவர்கள் நலன் பற்றியோ, மீனவர்கள் வாழ்வாதாரம் பற்றியோ, மீனவர்கள் உரிமைகள் பற்றியோ, அல்லது அறிவியல் பூர்வமான எந்த சிந்தனையும் இல்லாமல்*
முழுக்க, முழுக்க மீனவர்களை *குற்றவாளி போன்று* பார்ப்பதும். *குற்றப்பரம்பரை* போன்று பக்கத்துக்கு பக்கம் *குற்றவாளி குற்றவாளி* என்று குற்றம் சுமத்தி
*கடலில் மீனவர்கள் கால் வைக்க அனுமதி வாங்கவில்லை என்றால் தண்டனை.*
முதன்மை படகோட்டியோ அல்லது தொழிலாளிகளோ *அதிகாரியின் கண்* *அசைவுக்கு தப்பான* *நபராக மனதுக்குள்* *தோன்றினால் போதும்* உடனே மீனவர்க்கு தண்டனையாக *ரூபாய் 5000 முதல் ரூபாய் 5 லட்சம் வரை அபதாரம் கட்டவேண்டும்.*
சிறை தண்டனை அல்லது படகு பறிமுதல் அல்லது இதில் இருந்து இரண்டையும் சேர்த்து கூடதரலாம்
12 கடல் மையிலுக்கு அப்பால் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றால் எந்த எந்த மீனவர்கள் என பெயர் கொடுத்து லாக் புத்தகத்தில் பதிவு செய்து விட்டு 80 வது பாயிண்டில் மீன்பிடிக்க செல்வதாக சொல்லி விட்டு 85 வது பாயிண்டில் மீன்பிடித்தால் தண்டனை
*அங்கு மீன் இல்லை என்றால் ஏற்படுகின்ற இழப்பு இழப்பிட்டு தொகையை யார் தருவது என்பது தெரியாது ?*
முதலீடு செய்து மீன்பிடித்து வந்த மீனவர் தான் பிடித்து வந்த மீனை மீனவர்கள் விருப்பத்திற்கு விற்க கூடாது
*அரசு சொல்லும் நிறுவனத்திடம் அடி மாட்டு விலைக்கு கொடுக்க வேண்டும்.*
*இன்றைக்கு பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தும் தற்சார்பு பொருளாதாரமாக விளங்கிய மீன்பிடி தொழிலை முடக்கி தற்போது தற்சார்பு பொருளாதாரத்தை சீர்குலைக்கும் இந்த இந்திய கடல் மீன் வள மசோதா தேவை இல்லை*
இந்திய கடல் மீன்வள மசோதா 2021 என்ற பெயரில் *வணிக கப்பல் சட்டம் 1958 கொண்டு வந்து மீன்வள மசோதா என்ற பெயரில் வணிக ரீதியாக மீன் பிடிப்பவரும் வயத்து பிழைப்புக்கு மீன் பிடிப்பவரும் ஒன்று என்று சொல்கின்ற இந்த சட்டம் தேவை இல்லை .*
மாநில அரசின் 1983 ஆம் ஆண்டு சட்டத்தை பறிக்கும் இந்த சட்டத்தில் எந்த திருத்தமும் தேவையில்லை ,
*இந்த இந்திய கடல் மீன்வள மசோதா 2021யை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.*
*டாக்டர் கலைஞர் அவர்கள். எடுத்த நிலைப்பாடே தமிழக அரசின் நிலைப்பாடாக எடுக்க வேண்டும். என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை மீனவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.*
2. *இந்தியாவில் தமிழ்நாடு ,ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகராஷ்ட்ரம் ,மேற்கு வங்காளம் ,ஒரிசா உள்ளிட்ட 10 கடலோர மாநிலங்களிலும் புதுச்சேரி ,கோவா, அந்தமான், நிக்கோபர் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவுக்குட்பட்ட யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட கடற்பகுதிகளில் சுமார் 8 கோடி பரம்பாரிய மீனவ மக்கள் உள்ளார்கள். இவர்களை ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தி மீனவர்கள் ஜாதி ரீதியாக இந்திய திருநாட்டில் எத்தனை கோடி பேர் உள்ளார்கள் என்ற புள்ளி விவரங்களை வெளியிடுங்கள்.*
*பாரம்பரிய மீனவ மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், அரசியலிலும் இட ஒதுக்கீடு பெற வேண்டும். என்றால் முதலில் ஜாதி ரீதியான கணக்கெடுப்பு மிக மிக அவசியமும் அவசரமும் கூட அந்த கணக்கெடுப்பு அடிப்படையில் பழங்குடியினர் களுக்கு உள்ள அனைத்து பொருத்தங்களும் உள்ளதால் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். என்று அகில இந்திய மீனவர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றது.*
*ஏன் என்றால் பழங்குடி மக்கள் காடுகளை நம்பி வாழ்கின்றார்கள். அதே போன்று மீனவர்களும் கடலை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துகின்றார்கள்.*
*பழங்குடி மக்கள் காடு இருக்கும் பகுதிகளில் கூட்டமாக வாழ்கின்றார்கள். அதே போன்று மீனவர்களும் கடற்கரையில் மட்டுமே கூட்டமாக கூடி வாழ்பவர்கள்.*
*பழங்குடி மக்களுக்கு நிலங்களுக்கு பட்டா கிடையாது அதே போன்று மீனவர்கள் இன்றும் கடல் புறம்போக்கு நிலத்தில் தான் பட்ட இல்லாமல் கடல்புறம் போக்கில் தான் குடியிருந்து வருகின்றர்கள்.*
*உள்ளூர் கோயில் நிலங்களில் தான் குடியிருந்து வருகின்றார்கள். அல்லது அரசு கட்டி தரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தான் குடியிருந்து வருகின்றார்கள்.*
*பழங்குடி மக்கள் எப்படி மழை , புயல், வறட்சி மற்றும் கொடிய மிருகங்களிடம் இருந்து எப்படி இயற்கையை எதிர்த்து வாழ்கின்றார்களோ அதோ போன்று மீனவ மக்களும் இயற்கையை எதிர்த்து வாழ்கின்றார்கள். நிலையான தொழில் இல்லாதவர்கள்.*
*பழங்குடி மக்கள் பிற சமூகங்களில் இருந்து தனித்து வாழ்ந்தவர்கள். அதே போன்று மீனவ மக்களும் பிற சமூகங்களில் இருந்து தனித்து வாழ்கின்றவர்கள்.*
*பழங்குடி மக்கள் எப்படி காட்டில் பறவைகளையும் அல்லது வன விலங்குகளை வலையை விரித்தும் ஆயுதம் கொண்டு வேட்டையாடி பிடிக்கின்றார்களோ அதை போன்று தான் மீனவர்களும் வலை விரித்து மீன்களை வேட்டையாடி பிடிக்கின்றார்கள்.*
*பழங்குடி மக்களை போன்று தான் மீனவர்கள் கலச்சாரம், உணவு பழக்கவழக்கம் உடையவர்கள்.*
*இப்படி பல்வேறு சிறப்புகளை பழங்குடி மக்களுக்கான அடிப்படை தன்மைகள் மீனவர்களிடம் உள்ள காரணத்தால்*
அந்த அடிப்படையில் *பாரம்பரிய மீனவ மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.*
*உடனடியாக கடல் மீனவர்களை ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தி பல்வேறு உட் பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் பாரம்பரிய மீனவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கடல் மீனவர்கள் மட்டும் தான் மீனவர்கள் என்று அறிவிக்கவும். கடல் மீனவர்கள் ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தவும்.*
*கடல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மத்திய அரசு கடல் மீனவர்களை (ST) பழங்குடியினர் என்ற அந்தஸ்தை தர வேண்டும். என்று மீனவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .*
3. *மீனவர்கள் பயன்படுத்தும் டீசல் விலை இன்றைக்கு நூறு ரூபாயை நெருங்கி கொண்டு இருக்கிறது.*
*இதனால் மீனவர்கள் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு*
*ஆயிரக்கணக்கான விசைப்படகுகளும், ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தற்சார்பு பொருளாதாரம் இன்றி நலிவுரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.*
*எனவே மீனவர்கள் பயன்படுத்தும் அனைத்து டீசலுக்கும், மண்ணெண்ணைக்கும் மத்திய அரசின் சாலைவரி , பசுமை வரி,கலால்வரி மதிப்பு கூட்டப்பட்ட வரிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து வரிகளை ரத்து செய்து டீசலுக்கும், மண்ணெண்ணெய்க்கும் வழங்கவேண்டும். அல்லது மாநில அரசுகள் வழங்குவதை போன்று மானியத்தை தன் பங்குக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். மீன்பிடி தொழில் சார்ந்த உப பொருட்களின் விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதால் மீன்பிடி தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.*
*மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 70 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி கிடைப்பதை மீனவர்களுக்கு மானிய டீசலும் மானிய மண்ணெண்ணெய்யாக வழங்குங்கள்.*
*4.ஆண்டு தோறும் மீன்களின் இன பெருக்கத்துக்காக கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழகம்,புதுச்சேரி, ஆந்திரா,மேற்குவங்கம், மற்றும் ஒரிசா வரை உள்ள கிழக்கு கடற்கரையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14 தேதி நள்ளிரவு முதல் துவங்கி ஜீன் 15 என 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நடை முறைப்படுத்தப்படுகின்றது. இந்த பருவ காலங்களில் மீன்கள் இனவிருத்தி நடை பெறாததால் தொடர்ந்து கடல் வளம் அழிந்து வருகின்றது.அதே நேரம் மீன்களின் இன பெருக்கம் நடை பெறுகின்ற நேரத்தில் மீன்களை பிடிக்க மீனவர்களை அனுமதிக்கின்றீர்கள்*
*ஆகவே மீன்கள் உற்பத்தி ஆகின்ற அக்டோபர்,நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடலிலும் கடற்கரையிலும் நல்ல மழை பொழிவு நேரத்தில் மீன்களின் வளர்ச்சிக்கும் மீன்களின் இன பெருக்கத்திக்கான நேரத்தில் மீன்களை மீனவர் பிடிப்பதால் கடந்த 15 ஆண்டுகளாக மீன்களின் அளவு குறைந்து கொண்டே வருகின்றது. மீன்களின் இனவிருத்தி நடைபெறாத பொருத்த மற்ற நேரத்தை மீன்பிடி தடை காலமாக அரசு அறிவித்து நாட்டுடைய பொருளாதாரமும் தனி மனித தற்சார்பு பொருளாதாரத்திற்கு குந்தமாக அமைந்துள்ளது. எனவே மீன்பிடி தடை காலத்தை மாற்றி அமைத்து அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கு என மாற்றி அமைக்குமாறு*
*மாண்புமிகு மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் அவர்களை ஒட்டு மொத்த மீனவ மக்கள் சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.*
*இப்படிக்கு.*
*டாக்டர் நாஞ்சில் பி ரவி.*
*தேசிய செயல் தலைவரும் & தேசிய செய்தி தொடர்பாளர்.*
*அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)
















