தண்டையார்பேட்டையில் திருநங்கையின் உணவகத்தை போக்குவரத்து இணை ஆணையாளர் திறந்துவைத்தார்;

0
475

சென்னை தண்டையார்பேட்டை மெட்ரோ நிலையம் அருகே திருநங்கையின் தேநீர் மற்றும் சிற்றுண்டி உணவகத்தை வடசென்னை வடக்கு மண்டல போக்குவரத்து துறை இணை ஆணையாளர் லதா லட்சுமி மற்றும் துணை ஆணையாளர் பிரதீப் ஆகியோர் திறந்து வைத்தனர்
இணை ஆணையாளர் லதா லட்சுமி கூறுகையில் திருநங்கையின் இது போன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று கூறியவர் வைஷ்ணவி என்ற திருநங்கை வடசென்னையில் ஷேர் ஆட்டோவை ஓடிவந்தது பெருமை அளித்ததாகவும் அவரைப் போன்று பல திருநங்கைகளும் வாழ்வில் உயர்ந்திட இது போன்ற புதிய முயற்சிகளை எடுத்து முன்னேற வேண்டும் என்று கூறினார்
மேலும் திருநங்கை வைஷ்ணவி கூறுகையில் இந்தியாவில் முதல் ஷேர் ஆட்டோவை திருநங்கையாக தான் ஓடி வந்தது தனக்கு பெருமை அளித்ததாகவும் தற்போது கொரோனா காலகட்டத்தில் ஷேர் ஆட்டோ ஓட்ட முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகி தற்பொழுது மேலும் புதிய முயற்சி எடுத்து செம்ம டேஸ்ட் என்ற பெயரில் சிற்றுண்டி உணவகத்தை துவக்கியதாகவும் தன்னிடம் போதிய வருமானம் இல்லாததால் சிற்றுண்டி உணவகத்தை திறப்பதற்காக ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஹால் மார்க் உதவி செய்தார்கள் அவர்களுக்கு தன் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சிறப்பு அழைப்பாளராக அழைத்தவுடன் கடையை வந்து திறந்து வைத்த போக்குவரத்து இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here