வரதட்சணை – பெண் தற்கொலை ஆர்.டி.ஒ விசாரணை!

0
284

வரதட்சணை கேட்டு கணவர் டார்ச்சர் செய்ததால் பெண் தற்கொலை

கொருக்குப்பேட்டைபேட்டை மூப்பனார் நகர் 5வது‌தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி என்ற ரேகா வயது 31 இவருக்கு 2009ஆம் ஆண்டு குமரன் என்பவருடன் திருமணம் நடந்தது ஆனால் அவரது கணவர் 2018ல் இறந்துவிட்டார் இதனால் அவர் தகப்பனார் வீட்டில் இருந்து வந்தார் இந்த நிலையில் அவரது மாமா மகன் ரமேஷ் வயது 35 லாரி டிரைவரான இவர் ரேகாவை திருமணம் செய்வதாக கூறி உள்ளார் இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது ரமேஷ் தனது மனைவியிடம் தகப்பனார் வீட்டில் 5 பவுன் நகை வரதட்சனை வாங்கிக்கொண்டு வா என கூறியுள்ளார் ஆனால் ரேகா மறுத்துள்ளார் இதனால் ரேகாவுக்கு ரமேஷ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ரேகா நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் அவரது உடலை ஆர்கே நகர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் திருமணமாகி இரண்டு மாதத்தில் மரணமடைந்து விட்டதால் ஆர்டிஒ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ரமேஷ் தலைமறைவாகிவிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here