அரசு மருத்துவமனைகளின் வெளியே உள்ளவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தொடர்ந்து உணவு அளித்து வருகின்றனர்
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் நோய்த் தொற்றால் பாதிப்படைந்து அனுமதித்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையின் வெளியே சாலைகளில் தங்கியுள்ளனர் தற்போது தளர்வுகளற்ற ஊரடங்கு கடைப்பிடிக்க படுவதால் போக்குவரத்து இல்லாமலும் உணவு கிடைக்காமலும் பலரும் பாதிப்படைந்து வருகின்றனர் இதனை தடுக்கும் முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தொடர்ந்து 15 நாட்களாக உணவு அளித்து வருகின்றனர்
இதற்காக வண்ணாரப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் வடசென்னை மாவட்ட தலைவர் அலி தலைமையில் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஒன்றாக சேர்ந்து உணவு தயாரித்து சுத்தமான முறையில் பேக்கிங் செய்து நேரடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று கொடுத்து வருகின்றனர் சென்னை எக்மோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு எடுத்துச்சென்று தொடர்ந்து 15 நாட்களாக உணவினை வழங்கி வருகின்றனர்
















