தண்டையார் பேட்டை மண்டலத்தில் கொரொனொ தடுப்பு பணிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தலைமையில்
நடைபெற்ற கூட்டத்தில்
ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர் மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் மாநகராட்சி அதிகாரிகள் சுகாதாரத் துறையினர் மருத்துவத் துறையினர் பங்கேற்றனர
கூட்டத்தின் முடிவில் பேசிய அமைச்சர் சேகர் பாபு
சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கொரொனா நோய்த்தடுப்பு மற்றும் நோயிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மண்டல வாரியாக சட்டமன்ற தொகுதி வாரியாக சம்பந்தப்பட்ட தொகுதி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்
ஒருங்கிணைந்த களப்பணியாளர்கள் மருத்துவத் துறை சென்னை மாநகராட்சி மருத்துவ துறை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்ததாக தெரிவித்தார் கூட்டத்தில் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும்
தண்டையார்பேட்டையில் உள்ள சின்ன ஸ்டான்லி அரசு புறநகர் மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வண்ணாரப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவ மனைகளில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியோடு படுக்கை அறைகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் அதேபோல மண்டலத்துக்கு அடங்கிய மயானங்களை பார்வையிட்டு நோய் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் நல்ல முறையில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்வதற்கு கலந்து ஆலோசிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்
தங்களுடைய கோரிக்கைகளையும் மாநகராட்சி அதிகாரிகளின் கோரிக்கைகளையும் கலந்தாலோசித்து முதலமைச்சர் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவித்தார்
ஒன்றிணைந்து களத்தில் செயல்பட்டு கொரொனாவை வெல்வோம் என தெரிவித்தார்
கொரொனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள் என்று கணக்கிடப்படுகிறது
வீட்டில் தனிமைப்படுத்தவர்கள் அவர்களுக்கான சிகிச்சை முறைகள் ஆலோசிக்கப்பட்டு கூடுதலாக மருத்துவ பணியாளர்களில் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டது
நோய்த்தொற்று எங்கு அதிகம் இருக்கிறதோ அங்கு விரைந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி துறை மருத்துவ துறை செயல் படும் என தெரிவித்தார்















