சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டி படுகொலை;

0
401

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பட்டப்பகலில் ஒருவரை நான்கு பேர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் முன்விரோதம் காரணமாக பட்ட பகளில் ரவுடி நாராயணன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது

குடும்பத் தகராறில் தனது மனைவி தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நாராயணன் தனது மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு சென்று பின்னர் வீடு திரும்பினார் பின்னர் அவர் காசிமேடு துறைமுகம் பகுதியில் உணவு அருந்திவிட்டு அமர்ந்திருந்தபோது திடீரென வந்த 4 பேர் கொண்ட வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலக்ஷ்மி உதவி ஆணையர் தினகரன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவ இடத்தில் இருந்த கத்தி மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்

கடந்த 3 மாதத்திற்கு முன்பு நாராயணனின் தம்பி சுடர்மணி திருவொற்றியூர் பகுதியில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here