தண்டையார்பேட்டையில் கத்தியால் வெட்டப்பட்டு ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

0
627

தண்டையார்பேட்டை இந்திரா காந்தி நகரைச் சார்ந்த வேலு என்பவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார் இவர் தண்டையார்பேட்டை ஐஓசி பகுதியில் உள்ள வினோபா நகரில் உள்ள தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் இந்நிலையில் இவருக்கும் தினேஷிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது இந்நிலையில் தினேஷின் கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து வேலுவை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர் ரத்த வெள்ளத்தில் இருந்த வேலுவை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து ஆர்கேநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்
ஆர்கே நகர் காவல் துறையினர் சம்பவம் குறித்து தினேஷ் என்ற குட்ட தினேஷ் கணேஷ் மணிகண்டன் அசோக் குமார் பிரவீன் மற்றும் அப்பு என்ற தொங்கு ஆகிய 7 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here