காவல் நிலையம் முன் தீ குளிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு;

0
371

சென்னை சூளைமேட்டை சேர்ந்த 39 வயதான சங்கையா மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சுதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சுதாவிடம் பணம், நகை, ஏடிஎம் கார்டு அனைத்தையும் கொடுத்து வைத்துள்ளார். நாளடைவில் சுதா நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சங்கையா அது குறித்து சுதாவிடம் கேட்டபோது சுதா இவரை விட்டு விட்டு அவரது கணவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில் சுதா பணத்திற்கு ஆசைப்பட்டு வீட்டு வேலை செய்வது போல் நடித்து மனைவியை பிரிந்து வாழும் கணவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கையா அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, காவல் நிலையம் முன் தீ குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here